திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் நலன் கருதி கிரிவலப் பாதை, குடிநீர் வழங்கும் நிலையம் மற்றும் சுகாதார வசதிகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும். எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல், இந்த ஆண்டின் தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp