திருவண்ணாமலை ரோட்டரி டயாலிசிஸ் மையத்திற்கு குடியாத்தம் ரோட்டரி சங்கம் வருகை!!

திருவண்ணாமலை மூன்சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக செயல்பட்டு வரும் ரோட்டரி டயாலிசிஸ் மையம் இன்று முக்கிய உறுப்பினர்களின் வருகையை பெற்றது.

குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பில், முன்னாள் மாவட்ட ஆளுநர் JKN பழனி, முன்னாள் தலைவர்கள் TN. ராஜேந்திரன், NS. குமரகுரு, RV. அரிகிருஷ்ணன், வருங்கால தலைவர்கள் K. சந்திரன் மற்றும் TS. ரவிச்சந்திரன் ஆகியோர் மையத்துக்கு வருகை தந்து, அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொண்டனர்.

மையத்தின் நிர்வாகிகள் K. கிருஷ்ணகுமார், விஜயன், மற்றும் டாக்டர் அருண்மொழி வர்மன் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த சந்திப்பில், குடியாத்தத்தில் ரோட்டரி டயாலிசிஸ் மையம் துவங்கும் திட்டம் குறித்தும் ஆலோசனைகள் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வில், தற்போதைய மாவட்ட ஆளுநர் M. ராஜன்பாபு அவர்கள் தாமும் கலந்து கொண்டு வழிகாட்டுதல் வழங்கினார்.

இத்தகைய வருகைகள், சமூக நலத்திற்காக செயல்படும் ரோட்டரி சங்கங்களின் அர்ப்பணிப்பையும், மக்கள் பயன்பெறும் திட்டங்களை விரிவாக்கும் தன்னலமில்லா சேவையையும் பிரதிபலிக்கின்றன.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp